lundi 29 septembre 2008

தமிழரின் பண்பாட்ட மீட்டு நிலை நிறுத்திய பதிப்பியல்

வாசித்தல், வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை வளர்க்க உலக புத்தகத் தினத்தை யுனெஸ்கோ அமைப்பு உருவாக்கியது. இது 1995ஆம் ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்பெயினில் உள்ள கேடலோனியா புத்தக விற்பனையாளர்களால் புத்தகத்திற்கும் ஏப்ரல் 23ஆம் தேதிக்குமான தொடர்பு சிந்தரிக்கப்பட்டது. இன்றைய தினத்தில்தான் ஸ்பானிய மொழியின் இலக்கிய மேதை, உலக இலக்கிய முன்னோடி, டான் குவிசாட் நாவல் புகழ் செர்வாண்டிஸ் காலமானார். மேலும் உலக இலக்கிய மேதைகள் பலர் இன்றைய தினத்தில் பிறந்துள்ளனர் அல்லது மறைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழைப் பொறுத்தவரை, ஏன் இந்திய மொழிகளைப் பொறுத்தவரையிலும் அச்சு எந்திரங்களின் வருகையையும் அதன் பயன்பாடுகளையும் இன்று முழுதும் நுகரும் ஒரு தன்மையை நாம் பார்க்கிறோம்.அச்சும் தமிழும்!

ஆய்வுகள் இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளினால் பல்வேறு உயர்ந்த நிலைகளை அடைந்துள்ளது என்றாலும், இன்றைய வளர்ச்சிக்கு அன்றைய துவக்கம் அத்தியாவசியமானது. தமிழக பதிப்பியல் வரலாற்றில் நமக்கு கிடைத்த முதல் நூல் தம்பிரான் வணக்கம் (1557).துவக்கத்தில் கிறித்தவ மத போதனை நூல்களே அதிக அளவில் வெளிவந்தன. 1712 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் முதன் முதலாக அச்சுக் கூடம் நிறுவப்பட்டது. இங்கிருந்து பல சமய நூல்களும், மொழி அகராதிகளும் வெளி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.பெரும்பாலும் சமய நூல்களே முதலில் வெளிவந்தன. பிறகுதான் மருத்துவம் சமுதாயம், இலக்கியம் சார்ந்த நூல்கள் வெளிவருகின்றன. 1810ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் தமிழில் புதிய பதிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.திருக்குறள் மற்றும் நாலடியார் ஆகியவை 1812ஆம் ஆண்டு பதிக்கப்பட்டதன் மூலம் இலக்கிய நூல்களின் வெளியீடு துவங்கியது. இதே ஆண்டில்தான் திருக்குறள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது.தொல்காப்பியத்தையும், நன்னூலையும் நேரடியாக வாசிக்க முடியாமல் இருந்த காலக்கட்டத்தில் 1811ல் திருவேற்காடு சுப்புராய முதலியார் இலக்கண நூலை உரைநடையில் முதன் முதலாக வெளியிட்டார்.அதன் பிறகு 1824 முதல் 1835 வரை சதுர்கராதி, தமிழ் அரிச்சுவடி, இலக்கண வினா-விடை மாதிரி, நன்னூல் மற்றும் நன்னூல் விருத்தியுரை ஆகியவை பதிக்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில்தான் தமிழர் கல்வி இயக்கம் பெரிதும் களை கட்டியிருக்கும் என்று நாம் கருத இடமுண்டு.நான்காவது தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழில் பல நூல்களை வெளியிட்ட மதுரை பாண்டித்துரைத் தேவர் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மேலை நாட்டினரின் தமிழ்ச் சேவை!

பதிப்பியலிலும், தமிழ் மொழி ஆய்வு மற்றும் பரவல் ஆகியவற்றில் மேலை நாட்டு பண்டிதர்களின் பங்களிப்பை நாம் கூறுவதற்கு வார்த்தைகள் போதாது. ஜி.யு. போப், பெஸ்கி ஆகியோர் இலக்கண வினா-விடை மற்றும் கொடுந்தமிழ் ஆகிய நூல்களை மொழிபெயர்த்து வெளி நாட்டவர்க்கு அனுப்புவதற்காக வேண்டி தமிழிலும் பதிப்புச் செய்தனர். பல ஐரோப்பியர்கள் இந்த காலக்கட்டத்தில் தமிழறிஞர்களிடம் தமிழ் மொழியை கற்றறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(நன்றி வெப்துனியா தமிழ் இணையத்தளம்)

2 commentaires:

ஆதவன் a dit…

தமிழ் வளர்க்க பாடாற்றிய உள்ளங்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். நல்ல பல தரவுகள் கிடைத்தன. தொடர்ந்து எழுதுங்கள்.

மாலதி a dit…

தொடர்ந்து எழுதுங்கள்.